

இடது: பேரணியின் முதல் நாளன்று (2019 பிப்.20) வார்லி பழங்குடியினரான சோன்யா மல்கரி, 50, மரபான தர்பாவை இசைத்துக்கொண்டிருந்தார். மகாராஷ்டிரத்தின் பல்கார் மாவட்டம், விக்ரம்கட் வட்டம், சகாரே கிராமத்திலிருந்து அவர் வந்திருந்தார். மாநிலத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு மத்தியில் நாசிக்கின் மகாமார்க் பேருந்துநிலையத்தில் சோன்யா இசை நிகழ்த்திக்கொண்டிருந்தார். வலது: நாசிக் மாவட்டம், சுர்கனா வட்டம், வாங்கன் சுலே கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்த் சகாரே, 55. பவ்ரியை இசைத்துக்கொண்டிருந்தார். பட்டியல் பழங்குடியினமான கோக்னா சமூகத்தைச் சேர்ந்த அவர், வனத்துறை வசமுள்ள 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுவருகிறார்

நாட்டுப்புற தெய்வீகப் பாடல்களைப் பாடும் பிவா காலே. நாட்டுப்புற தெய்வீகப் பாடல்களைப் பாடும்போது பிவா காலே சிப்லி இசைக்கிறார். நாசிக் மாவட்டம், பேந்த் வட்டம், ரெய்ட்டாலே கிராமத்தைச் சேர்ந்த இவர், ஊர் ஊராகப் போய் நாட்டுப்புற தெய்வீகப் பாடல்களைப் பாடியபடி இரந்துவாழும் கண்ணன் வழிபாட்டுச் சமூகத்தைச் சேர்ந்தவர்

தந்தனாவை(ஒரே கம்பியால் ஆனது) மீட்டியபடி இருந்த குலாப் காவித் (இடது),49. நாசிக்கின் திண்டோரி வட்டம், போப்சி கிராமத்தைச் சேர்ந்தவர். அதே ஊரைச் சேர்ந்த பௌசாகேப் சவான், 50, (வலப்பக்கம், சிவப்புத் தொப்பி அணிந்தவர்), கஞ்சரியை இசைத்துக்கொண்டிருந்தார். திண்டோரி வட்டத்தின் சக விவசாயிகளுடன் சேர்ந்து விவசாயிகள் போராட்டத்தைப் போற்றும் பாடல்களைப் பாடும் காவித்தும் சவானும்

பிப்ரவரி 21 இரவில் பேச்சுவார்த்தை முடிவுக்காகக் காத்திருந்த வேளையில் பாடல்களும் ஒருங்கிணைந்த ஆட்டமுமாக விவசாயிகள்
தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்