
மேற்கு ஒடிசாவில் அலுமினிய தாதுப் பொருட்கள் நிறைந்த நியாம்கிரி மலைகள் அம்மாநில டோங்கிரியா கோந்த் பழங்குடியினரின் ஒரே புகலிடம்

திருமணங்கள் எளிமையாக, சடங்குகளுடன் நடைபெறுகிறது. இச்சமூகத்தினர் வேலைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு செய்கின்றனர். திருமண சடங்கிற்காக (2009-ம் ஆண்டில்) அண்டை கிராமங்களைச் சேர்ந்த இளைஞர் பட்டாளங்கள் உள்ளூரில் புகழ்பெற்ற தாப் கருவியை வாசித்தபடி ஊர்வலமாக வந்துக் கொண்டிருக்கின்றனர்

பாடல் மற்றும் இசைக்கு நடுவே விழா நடைபெறும் இடத்திற்கு வந்த இசைக் குழுவினர்

பிற சமூங்களைப் போன்று இல்லாமல் டோங்கிரி கோந்துகள் சமூகத்தில் திருமணத்திற்கு முன், மணப் பெண்ணின் சம்மதம் கேட்கப்படுகிறது. லோடோ சிகாக்காவை மணமகனாக, மணமகள் தெலிடி ஏற்றுக் கொண்டாள்

தெலிடியுடன் சமூகத்தின் பிற பெண்களும் சேர்ந்து கொண்டு தலையில் பித்தளை தவளைகளை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க வற்றாத மலை ஓடையை நோக்கி புறப்படுகின்றனர். இத்தண்ணீரில் தான் அரிசி சமைக்கப்பட்டு மணப் பெண் சார்பில் தாரணி பெனுவிற்கு (பூமா தேவி) படைக்கப்படுகிறது

மணமகனின் கிராமமான லாக்பாடருக்கு நடனமாடியபடி செல்லும் மணமகளின் தோழிகளை ஆர்வத்துடன் பார்க்கும் கிராம மக்கள்

நடனத்துடன் ஒத்திசையும் தாப்புகளின் ஒலி

நடனம் வேகம் பெறுகிறது

கிராமத்தினர் திருமண விருந்திற்கு உணவு தயாரிக்கின்றனர். அரிசியும் பருப்பும் குறைந்த அளவு எண்ணெய், மசாலா ஆகியவற்றுடன் விறகு அடுப்பில் சமைக்கப்பட்ட இறைச்சிகள் இலைகளில் பரிமாறப்படுகிறது

விருந்திற்காக காத்திருக்கும் அச்சமூகத்தின் சிறுபிள்ளைகள்

அன்றைய
நாளின் கொண்டாட்டத்தில் மகிழ்ந்துள்ளார் இச்சிறுமி
தமிழில்: சவிதா