கொல்கத்தாவிலிருந்து பேருந்து புறப்பட்டதும், குண்டும் குழியுமான சாலைகளின் இருபுறமும் மீன் வளர்ப்பு குளங்கள், நீர் தேக்க பாத்திகள், தள்ளுவண்டி டீக்கடைகள் போன்றவற்றை காணும்போது மிகப்பெரும் நீர்நிலை நெருங்குவதை உணரலாம். எங்கள் படகு பரந்த நீல விரிப்பில் சவாரி செய்யும்போது, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சுந்தரவனத்தில் உள்ள பாலி தீவை நெருங்கும்போது நகர இரைச்சலை மறந்து 'மகிழ்ச்சியில் மூழ்குவது' எளிது.
இத்தீவில் வசிக்கும் இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம், வறுமையால் புலிகள், மான்கள் போன்ற விலங்குகளை வேட்டையாடுதல், சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தீவிற்கு அண்மையில் சென்றபோது எடுத்த புகைப்படங்கள்

அன்றைய நாள் தொடங்கியது: சரக்குகள், மனிதர்கள், விலங்குகள், சுற்றுலாப் பயணிகளுடன் சிக்கலான சுந்தரவன நீர் பாதைகளை கடக்க படகுகள் தயாராகின்றன

இந்த சதுப்புநில காடுகள் சிலசமயம் மனிதர்களையும், வனவிலங்குகளையும் ஒருவருக்கொருவர் பாதுகாத்துக் கொள்ளும் தடுப்பு வேலி போல செயல்படுகிறது. இதனால் இங்கு வாழ்க்கையும் பரஸ்பரம் அமைதியாக நடைபெறுகிறது

பாலி தீவின் படகுத் துறை கிராமத்திற்கு சதுக்கத்தை போன்று செயல்படுகிறது. அனைவரும் வந்து செல்லும் இடமாக இது உள்ளது. மனிதர்கள், சரக்குகள், ஆடுகள், கன்றுகள், மீன்கள் இத்தளத்தின் வழியாக அன்றாடம் கடக்கின்றன

மீன் வளர்ப்பு: நிலப்பரப்பில் சிறிய, பெரிய குலங்கள் வெட்டப்பட்டு நீர் தேக்கி மீன்களை வளர்த்து, விற்கின்றனர்

வலைப்பணி: சுந்தரவனத்தில் பலருக்கும் ஒருநாள் அலுவல் என்பது முற்றிலும் கடினமானது

மேய்ப்பரும், ஆடுகளும்(இடது) : பாலி தீவின் வளைந்து நெளிந்த தெருக்கள் குறுகலானவை, ஆனால் சுத்தமானவை. தெருக்களில் அவ்வப்போது தென்படும் குப்பைத் தொட்டிகள் (வலது), தெருக்களை சுத்தமாக வைக்க உள்ளூர் மக்கள் அவற்றை வைத்துள்ளனர்

வணிகப் பகுதியில் வியாபாரத்திற்கு காத்திருக்கும் ஆபரண வியாபாரி

இங்கு புலிகளை காண்பது அவ்வளவு எளிதல்ல. கிராமத்திற்கு சர்கசுக்கு கொண்டு வரப்பட்ட பெண் புலியை சந்திக்க ஆண் புலி ஒன்று ஐந்து கிலோமீட்டருக்கு மேல் நீந்தி வந்த பழங்கதையும் உலவுகிறது. கால போக்கில் இங்கு புலிகளின் எண்ணிக்கையும் சரிந்துவிட்டது

உடும்பு, மான், காட்டுப் பன்றிகள், முதலைகள், மீன்கொத்திப் பறவை ஆகியவற்றை இங்கு அதிகம் காண முடிகிறது

ஹெல்ப் அறக்கட்டளை உள்ளூர் நாடகக் குழுவிற்கு புத்துயிர் அளித்துள்ளது. இந்த குழு போன்பீபி தெய்வத்தின் கதையை நாடகமாக நிகழ்த்துகிறது. தேன் மற்றும் விறகுக்கு ஈடாக ஒரு புலிக்கு துக்கே என்ற இளைஞன் உணவளிக்கப்பட இருந்த புராணக்கதை ஒன்றைக் கூறுகிறது. ஆனால் வேண்டுதலை ஏற்று போன்பீபி அவன் உயிரைக் காப்பாற்றியது

மற்ற புலிகளைப் போன்றே சுந்தரவன புலிகளும் மதம், சமூகம் என பாகுபாடின்றி அனைவரையும் தாக்குகிறது. எனவே இந்து, முஸ்லிம் என பேதமின்றி அனைவரும் போன்பீபி பாதுகாப்பை வேண்டுகின்றனர். இங்கு புலியை தெய்வம் வெல்கிறது


ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் சீரான போக்குவரத்தால் படகுத் துறை எப்போதும் பரபரப்பாக இயங்குகிறது. சிலர் காலையில் பல் துலக்கியபடி சூரியனை வரவேற்கின்றனர், மற்றவர்கள் அரட்டை அடித்தபடி, சீட்டு விளையாடி, வந்து செல்லும் படகுகளை வேடிக்கை பார்த்தபடி செல்கின்றனர்

இன்றைய நாளுக்கான பணி முடிந்தது, வீட்டிற்கு திரும்பும் நேரம் இது
தமிழில்: சவிதா