வயல்களில் நடங்கள், ஏரியில் நீந்துங்கள், சூரிய வெளிச்சம் வானத்தில் பரவுவதை பாருங்கள், நிறங்கள் மாறுவதை காணுங்கள். காதுகளை தரையில் வையுங்கள். வாழ்க்கைகள், காதல்கள், சந்தோஷம், இழப்பு ஆகியவற்றை பற்றி மக்கள் பேசுவதை கேளுங்கள். இந்த உணர்வுகளை புகைப்படத்தில் பிடித்து, வாசகரை அதே இடத்துக்கு அனுப்பி மக்களை எதிர்கொள்ள செய்யுங்கள்.
இந்த ஆறு புகைப்படக் கட்டுரைகள் இந்தியாவின் கிராமப்புறம், நகர்ப்புறம், சிறு டவுன்கள் ஆகியவற்றின் இதயத்துக்கு உங்களை கொண்டு செல்லும். அழியும் கலை வடிவம், மேற்கு வங்கத்தின் முடிவுறா பசி, இமாச்சலப் பிரதேச பால்புதுமையரின் சந்தோஷமும் எதிர்ப்பும், தமிழ்நாட்டு விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகள், கடற்கரையோர கர்நாடகாவின் மேளச்சத்தத்துக்கான ஆட்டமென இப்புகைப்படங்கள், இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த நிலப்புரப்புகளிலிருந்தும் சமூகங்களிலிருந்தும் வாழ்க்கைகளிலிருந்தும் கதைகளை சொல்கின்றன.
கேமரா சக்திவாய்ந்த கருவி. சுய பிரதிபலிப்பை செய்யும் அது, இறுதியில் வெளிப்புறமாக திரும்பி அநீதியை படம் பிடிக்கிறது. அதை தீர்ப்பதற்கான வழி இருக்கும் திசையையும் காட்டுகிறது.
கீழே வரும் கட்டுரைகள் உங்களின் மனதை நெகிழ வைக்கும் அல்லது உறுத்தும்.
*****
எம். பழனி குமாரின் ‘புகைப்படம் மூலம் தங்கள் கதைகளை சொல்லும் என் மாணவர்கள்’
தூய்மைப் பணியாளர்கள், மீனவப் பெண்கள் மற்றும் பிறரின் குழந்தைகள் முதன்முறையாக கேமராவை, பாரியின் புகைப்படக் க்லைஞர் எம்.பழனி குமார் நடத்தும் பயிற்சி பட்டறையில் ஏந்தியிருக்கின்றனர்.

’பரவலாக அறியப்படாத தங்களின் கதைகளை, என் மாணவர்கள் சொல்லவேண்டும் என விரும்பினேன். இந்த பயிலரங்கின் மூலம் தங்கள் தினசரி வாழ்வை அவர்கள் படமாக்குகிறார்கள்,’ என்கிறார் பழனி

இறால் வலையை இழுக்கத் தயாராக இருக்கிறார் இந்திரா காந்தி (முன்னால் இருப்பவர்)

பா. இந்திராவின் தந்தை பாண்டி தனது 13 வயதில் துப்புரவுப் பணியை மேற்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். துப்புரவுத் தொழிலாளர்களான அவரது பெற்றோரால், பாண்டிக்கு கல்வி அளிக்க முடியாத நிலை இருந்ததால் அவரும் இதே வேலைக்குள் தள்ளப்பட்டார். அவரைப் போன்ற துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முறையான கையுறை, காலுறை இல்லாத காரணத்தால், தோல் நோய் உள்ளிட்ட உடல் நலச்சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்
*****
எம். பழனி குமாரின் மீன் என்னை ஒரு நல்ல புகைப்பட கலைஞனாக மாற்றியது
கம்மாயில் மீன் பிடிக்கும் திறமையான மீனவர்களுக்கு மத்தியில், அவர்களுடைய அன்றாட வாழ்க்கைகளுக்கிடையில் வளர்ந்ததை பற்றி எழுதுகிறார் பாரியின் புகைப்பட கலைஞர் ஒருவர்.

கம்மாயில வலை இழுக்குற பிச்சை அண்ணா, மொக்க அண்ணா, கார்த்திக், மருது, செந்தில் கலை (புகைப்படத்தில் இருப்பவர்) இவங்களை நிறைய போட்டோ எடுத்துட்டே இருப்பேன்

மதுரை ஜவஹர்லால்புரத்தில் உள்ள பெரிய கம்மாயில் பல குழிகள் உள்ளன. ஒரு குழியில் மீன் பிடித்த பிறகு, மீனவர்கள் அடுத்த குழியைநோக்கி நகர்கிறார்கள்

ஜவகர்லால்புரத்தில் உள்ள பெரிய கம்மாயில் மீனவர்கள் வலையை இழுக்கின்றனர். இடது புறம் உள்ள மொக்க கம்மாக்களில் கற்கள் மற்றும் முட்கள் இருப்பதாகவும், அவர்கள் தங்கள் கால்களை நீண்ட நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார். 'முட்செடியால் குத்தப்பட்டால், எங்களால சரியா நடக்கக் கூட முடியாது. வலை வீசும் போது ரொம்ப கவனமா இருக்கனும்’ என்கிறார்
*****
ரிதாயன் முகெர்ஜியின் விலங்கின் வயிற்றிலுள்ள பசி
உலகப் பழங்குடி மக்களுக்கான சர்வதேச நாளான ஆகஸ்ட் 9ம் தேதி அன்று, மேற்கு வங்கத்தின் ஷபோர் பழங்குடி சமூகம் பற்றிய பார்வை. 70 வருடங்களுக்கு முன்பே குற்றப்பரம்பரை அடையாளம் நீங்கிவிட்டாலும் அவர்கள் இன்னும் சமூகரீதியிலான பாரபட்சத்தை எதிர்கொள்கின்றனர். வாழ முடியாமல் பட்டினியில் கிடந்து போராடுகின்றனர். குறைந்து வரும் காடுகளை உணவுக்கும் வாழ்வாதாரத்துக்கும் அவர்கள் சார்ந்திருக்கின்றனர்.

குறைவான பணமீட்டும் வாய்ப்புகளை கொண்டிருப்பதால் மேற்கு மெதினிபூர் மற்றும் ஜாடுகிராம் மாவட்டங்களில் வாழும் ஷபோர் சமூகத்துக்கு பசிதான் கதி

கனக் கோடலின் கை உடைந்தபிறகு சிகிச்சை கிடைக்காததால் நிரந்தரமாக அது உருமாறிவிட்டது. அவரின் கிராமமான சிங்துயில் மருத்துவர்களோ சுகாதாரமோ பெரியளவில் இல்லை

சத்துக்குறைபாடுடனான ஒரு குழந்தை
*****
ரிதாயன் முகெர்ஜியின் அச்சுறுத்தலுக்குள்ளாகும் அம்மா போன்பீபியின் பல கானம்
சுந்தரவனத்தில்
வசிப்பவர்கள் நடத்தும் பல இசை நாடகங்களில் போன்பீபியின் பல கான நாடகமும் ஒன்று. வருமானம்
குறைந்து வருவதால் பலர் இடம்பெயர்கின்றனர். விளைவாக நாட்டுப்புற நாடகத்தை நடத்தும்
கலைஞர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது

திரைச்சீலைகள் கொண்டு தெருவிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் அறைக்குள், பல கான இசை நாடகத்துக்காக பார்வையாளர்களும் நடிகர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்

கலைஞர்கள் அம்மா போன்பீபி, அம்மா மனசா மற்றும் ஷிப் தாகூர் ஆகியோரை பிரார்த்தித்து நாடகத்தை தொடங்குகின்றனர்

இளம் போன்பீபிக்கும் நாராயணிக்கும் இடையேயான சண்டையை நடிகர்கள் நடித்துக் காட்டுகின்றனர்
*****
ஸ்வேதா தகாவின் பெருமையுடன் தரம்சாலாவில் ஊர்வலம்
பால்புதுமையர் சமூகத்துக்கான உரிமைகளை முன்வைத்து இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த ப்ரைட் அணிவகுப்பில், மாநிலத்தின் பல கிராமங்களிலிருந்தும் சிறு டவுன்களிலிருந்தும் மக்கள் வந்து கலந்து கொண்டனர்

ஏப்ரல் 30, 2023 அன்று இமயமலையின் தவுலாதார் மலைத்தொடர்ச்சியிலுள்ள தரம்சாலாவில் ப்ரைட் அணிவகுப்பு முதன்முறையாக நடந்தது

மாற்றுப்பாலின உரிமைகளை அடையாளப்படுத்தும் கொடியை பிடித்திருக்கும் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆனந்த் தயாள்

மனிஷ் தபா ( மைக்குடன் இருப்பவர் ) ப்ரைட் அணிவகுப்பில் உரையாற்றுகிறார்
*****
நிதேஷ் மட்டுவின் ‘பிலி வேஷா’ நாட்டுப்புறக் கலை: தாளத்துக்கு ஆடும் புலிகள்
கடலோரக் கர்நாடகத்தில் உள்ள இளைஞர்கள் இந்த ஆவேசமான நாட்டார் நடனத்தை ஆடுகிறார்கள். உள்ளூர் மட்டத்திலேயே நிதி திரட்டி, ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த நடனம் தசரா, ஜென்மாஷ்டமி ஆகியவற்றை ஒட்டி நடக்கும் விழாக்களின் பிரிக்க முடியாத அங்கம்

பிலி வேஷா, தசரா மற்றும் ஜென்மாஷ்டமி விழாக்களின்போது ஆடப்படும் நாட்டுப்புற நடனமாகும்

(இடமிருந்து வலமாக) நிகில், கிருஷ்ணா, புவன் அமின், சாகர் பூஜாரி ஆகியோர் ஜெயகர் பூஜாரியிடம் வண்ணம் தீட்டிக்கொள்வதற்காக காத்திருக்கிறார்கள்

கரும்புலியாக வண்ணம் தீட்டிக்கொண்ட பிரஜ்வல் ஆச்சார்யா, தனது சாகசத் திறன்களைக் காட்டுகிறார். இந்த நடன வடிவத்தில் பாரம்பரிய அடவுகள் மாறி, ஆபத்தான சாகசங்கள் முக்கியத்துவம்பெற்றுவிட்டன
*****
எங்களின் பணியில் உங்களுக்கு ஆர்வமிருந்தாலும் பாரிக்கு பங்களிக்க நீங்கள் விரும்பினாலும் contact@ruralindiaonline.org மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். எங்களுடன் பணியாற்ற சுயாதீன எழுத்தாளர்களையும் செய்தியாளர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் ஆவணப்பட இயக்குநர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் கட்டுரை ஆசிரியர்களையும் விளக்கப் பட ஓவியர்களையும் ஆய்வாளர்களையும் வரவேற்கிறோம்.
லாபம் கருதி நடத்தப்படும் நிறுவனம் அல்ல, பாரி. எங்களின் பன்மொழி இணைய பத்திரிகையையும் பெட்டகத்தையும் ஆதரிக்கும் மக்களின் நன்கொடைகளை சார்ந்து நாங்கள் இயங்குகிறோம். பாரிக்கு நீங்கள் பங்களிக்க விரும்பினால் DONATE என்ற வார்த்தையில் க்ளிக் செய்யவும்.
தமிழில் : ராஜசங்கீதன்